வீட்டின் கதவின் நிறத்தை மாற்றாவிட்டால் 20000 பவுண்டுகள் அபராதம்!

0
552

பெண் ஒருவர் தனது வீட்டின் முன் கதவின் நிறத்தை மாற்றாவிட்டால் 20000 பவுண்டுகள் அபராதம் செலுத்த நேரிடும் என்று எச்சரிக்கப்பட்ட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இச் சம்பவம் ஸ்காட்லாந்தின் எடின்பரோவில் நியூ டவுன் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

நாற்பத்தெட்டு வயதான மிராண்டா டிக்சன் என்ற பெண் கடந்த ஆண்டு தனது கதவுக்கு Pink வண்ணம் பூசியுள்ளார்.

ஆனால் நகர சபை திட்டமிடுபவர்கள் புதிய நிறத்தை எதிர்த்ததுடன் பளபளப்பான வெள்ளை வர்ணம் பூசவலியுறுத்தினார்கள்.

இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் 2019ம் ஆண்டு தனது பெற்றோரிடமிருந்து வீட்டைப் பெற்று அதைச் சீரமைப்பதில் இரண்டு ஆண்டுகள் செலவிட்டுள்ளார்.

இளஞ்சிவப்பு நிறத்தால் 20,000 பவுண்டுகள் அபராதம் | A Fine Of Ps20000 For Being Pink

பிரித்தானியாவில் பிரிஸ்டல், நாட்டிங் ஹில் மற்றும் ஹாரோகேட் போன்ற நகரங்கள் பிரகாசமான நிறத்தில் உள்ளன.

வீட்டிற்கு வந்து தனது வீட்டுக் கதவைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது அதில் நான் பெருமைப்படுகிறேன் என்று அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக பயனர்களிடையே கதவு பிரபலமானது. பல சமூகவலைத்தள பயனர்கள் தெருவைக் கடக்கும்போது ​​​​கதவின் முன் புகைப்படம் எடுப்பதற்காக அவரது வீட்டிற்கு அருகில் நிற்கிறார்கள்.

ஆனால் எடின்பர்க் கவுன்சில் புதிய நிறத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் கதவுக்கு வெள்ளை வண்ணம் தீட்ட டிக்சனுக்கு உத்தரவிட்டுள்ளது. 

https://www.taatastransport.com/