வைரலாகும் பூனையின் டுவிட்டர் பதிவு; லிஸ் டிரஸ் ராஜினாமா!

0
505

பிரித்தனிய பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் ராஜினாமா செய்த நிலையில், பூனையின் டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. 

பிரித்தானிய பிரதமராக பதவி வகித்த போரிஸ் ஜான்சன் (Boris Johnson) அமைச்சரவை மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டு உள்பட பல விவகாரங்களை தொடர்ந்து அவர் பதவி விலகினார்.

இதனை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களின் பலத்த ஆதரவுடன் லிஸ் டிரஸ் பதவியேற்றார். 

பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் ராஜினாமா: வைரலாகும் பூனையின் டுவிட்டர் பதிவு! | Liz Truss Resigns Pm Cat Twitter Post Goes Viral

இந்த நிலையில், என்னை தேர்வு செய்ததற்கான இலக்கை அடைய முடியாததால் இராஜினாமா செய்கிறேன் என லிஸ் டிரஸ் (Liz truss) கூறியிருக்கிறார்.

இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

லிஸ் டிரஸ் தனது பதவி விலகல் பற்றி அறிவித்ததும், லேர்ரி பூனையின் டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் ராஜினாமா: வைரலாகும் பூனையின் டுவிட்டர் பதிவு! | Liz Truss Resigns Pm Cat Twitter Post Goes Viral

பிரித்தானிய அமைச்சரவை அலுவலகத்திற்கு என அதிகாரப்பூர்வ பூனை உள்ளது. அதனை சீப் மவுசர் என அழைக்கின்றனர். பிரித்தானிய பிரதமராக வருபவர் சீப் மவுசராக பூனையை நியமிக்கும் அதிகாரம் பெறுகிறார்.

இந்த சீப் மவுசராக உள்ள லேர்ரி என்ற பூனை பெயரில் டுவிட்டர் கணக்கு ஒன்று செயல்பட்டு வருகிறது.

அதில், டிரஸ்சின் பதவி விலகலை தொடர்ந்து வெளியான செய்தியில், அரசர் மூன்றாம் சார்லஸ், தன்னை நாட்டின் பிரதமர் பதவியை ஏற்று கொள்ளும்படி கூறியிருக்கிறார்.

பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் ராஜினாமா: வைரலாகும் பூனையின் டுவிட்டர் பதிவு! | Liz Truss Resigns Pm Cat Twitter Post Goes Viral

ஏனெனில், இந்த முட்டாள்தனம் நீண்ட நாட்களாக நீடித்து கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் பல்வேறு நெருக்கடியான தருணங்களில் எப்போதும் நகைச்சுவையான தகவல்களை வெளியிடுவது வழக்கம்.

கடந்த ஜூலையில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இருந்து எம்.பி.க்கள் பலர் பதவி விலகினார்கள். இதனை தொடர்ந்து, லேர்ரி பூனையும் டுவிட்டரில் தனது பதவி விலகல் செய்தியை பகிர்ந்து கொண்டது.

என்னால், தொடர்ந்து நல்ல மனசாட்சியுடன் இந்த பிரதமருடன் வசிக்க முடியாது. ஒன்று அவர் போகட்டும். அல்லது நான் போகிறேன் என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அமைச்சரவை அலுவலகத்தின் சீப் மவுசர் ஆனது, போட்டோஷாப் செய்யப்பட்ட சிறிய மேடை முன் லேர்ரி பூனை நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து இருந்தது. அதற்கு அடுத்த நாள் பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார்.