முதல் நாமினேஷனில் ஜிபி முத்து தேர்வு செய்த போட்டியாளர்!

0
7762

தமிழில் பிக் பாஸ் சீசன் 6 தற்போது நடந்து வருகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் பரபரப்பான மற்றும் பரபரப்பான நிகழ்வுகள் நிறைந்துள்ளன.

விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை என்பதால் இதற்கு முந்தைய சீசன்களை போலவே இந்த முறையும் நல்ல வரவேற்பை பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று வருகிறது.

மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

Biggboss 6 Tamil first nomination week new promo

இதனால் தொடர்ந்து பிக்பாஸ் குறித்த விஷயங்கள் இணையத்தில் எப்போதுமே ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. ஆரம்பத்தில் கலகலப்பாக ஆரம்பித்த பிக்பாஸ் 6 ஆவது சீசன் அடுத்தடுத்து டாஸ்க்குகள் மற்றும் அணியாக பிரிந்த பிறகு ஏகப்பட்ட பிரச்சனைகள் மற்றும் விவாதங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி வருகிறது.

இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொள்கிறது. பிக்பாஸ் 6  ஆவது சீசனின் முதல் வாரம் முடிவடைந்த நிலையில் வார இறுதியில் கமல்ஹாசன் கலந்து கொண்டு போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார். முதல் ஒரு வாரம் நடந்த விஷயங்கள் பற்றி போட்டியாளர்களிடம் பேசி இருந்தார் கமல். இதில் ஏராளமான சுவாரஸ்ய சம்பவங்களும் அரங்கேறி இருந்தது. வார இறுதி எபிசோடின் சிறப்பம்சமாக பார்க்கப்பட்டிருந்தது.

Biggboss 6 Tamil first nomination week new promo

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டின் முதல் நாமினேஷன் தொடர்பான ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி, விக்ரமன் மற்றும் சிவின் ஆகியோர் பெயரை ஆயிஷா நாமினேட் செய்திருந்தார். தொடர்ந்து ஆயிஷாவை நாமினேட் செய்த ராபர்ட் மாஸ்டர், கத்தி கத்தியே அனைத்தையும் அவர் சாதித்து விடுவதாகவும் குறிப்பிடுகிறார். தொடர்ந்து, ADK தனது நாமினேஷன் பட்டியலில் சாந்தியை தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் குயின்ஸியை நாமினேட் செய்திருந்தார் ஜிபி முத்து. மேலும், ஒரு சிலரிடம் ஜாலியாக பேசும் அவர் மற்றவர்களிடம் பேசாமல் இருந்து வருவதாகவும் ஜிபி முத்து தெரிவிக்க அது குயின்ஸியை தான் அப்படி சொல்கிறாரா அல்லது வேறு யாரையாவது அப்படி குறிப்பிடுகிறாரா என்பது முழு எபிசோடில் தான் தெரிய வரும்.

Biggboss 6 Tamil first nomination week new promo

இது தவிர அவரிடம் இன்னொரு முகம் உள்ளது என்றும் அதை இன்னும் அவர் காட்டவில்லை என்றும் போட்டியாளர் ஒருவர் குறித்து குயின்ஸி சொல்லும் காட்சிகளும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

முதல் வாரமே ஏராளமான விவாதங்கள் மற்றும் சண்டைகள் என பிக்பாஸ் களேபரமாகி இருந்த நிலையில் முதல் நாமினேஷன் குறித்த ப்ரோமோக்களும் இன்னும் விறுவிறுப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி உள்ளது.