நீச்சல் குளத்தில் வாளி வச்சு குளித்த தலைவர் G.P. முத்து… குற்றால அருவியாம்!

0
583

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6ல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிகம் வைரலானவர்கள் கலந்து கொண்டு போட்டியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும். ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.

கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

Biggboss Tamil Season 6 G P Muthu Bathing in Swimming pool

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

போட்டியாளர்கள் பல்வேறு குழுவினராக பிரிந்து தற்போது செயல்படுகின்றனர்.

இந்நிலையில் ஜி.பி. முத்து பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ள நீச்சல் குளத்தில் இறங்கி வாளி வைத்து குளிக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. ஜி.பி.முத்து குளிக்கும் போது குளத்தில் குற்றால அருவியில் குளித்தது போல் இருக்குதா பாடலை  பாடிக்கொண்டே அருகில் உள்ள அமுதவாணன் வாலியை பிடிங்கி தண்ணீர் நிரப்பி ஜி.பி.முத்து அசந்த நேரம் பார்த்து முகத்தில் ஊற்றி விட்டு செல்லும் போது ஜி.பி. முத்து, அமுதவானனை திட்டும் வீடியோ காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.