பிரியமாலிக்கு எதிராக விஷேட வைத்தியர் இரகசிய பொலிஸில் முறைப்பாடு

0
439

251 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியாமாலிக்கு எதிராக நேற்று (13) விசேட வைத்தியர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

பிரபல சட்டத்தரணி ஒருவருடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாடுகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு

இதனிடையே, பிரியாமாலி நான்கரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக மற்றொரு கோடீஸ்வரப் பெண் ஒருவர் குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேக நபரிடம் 7500 இலட்சம் ரூபாவை வழங்கியதாகக் கூறப்படும் வைத்தியர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய வருவேன் என தெரிவித்திருந்த நிலையில் அவரது முறைப்பாட்டை விசாரணை அதிகாரிகளும் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர்.

நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை எழுதி வைத்துவிட்டு நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்து வாய்மொழியாக முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்படி திலினி பிரியமாலி பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

பிரியமாலிக்கு எதிராக விஷேட வைத்தியர் இரகசிய பொலிஸில் முறைப்பாடு | Complaints Flowing In Against Thilini

 டிகோ குழும ஊழியர்களிடமும் விசாரணை

இதேவேளை, நிதி மோசடி குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு சொந்தமான டிகோ குழும ஊழியர்களிடமும் நேற்று (13ம் திகதி) இரகசிய பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

திகோ குழுமத்தின் ஊடகவியலாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் இருவரிடமிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திகோ குழுமத்துடன் தொடர்புடைய 35 பேரின் வாக்குமூலங்கள் எதிர்காலத்தில் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காவிந்த பியசேகரவின் வழிகாட்டலின் கீழ், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.