திருகோணமலையில் வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை  விடுவிக்க நடவடிக்கை!

0
373

திருகோணமலை – தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கான கள விஜயம் இன்றையதினம் (17-09-2022) இடம்பெற்றது.

இந்த களவிஜயமானது தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலின் பின் உரிய பிரதேசங்களுக்கு மேற்கொள்ளப்பட்டது.

திருகோணமலையில் காணியை விடுவிக்க இடம்பெற்ற அதிரடி நடவடிக்கை! | Trincomalee Field Visit For Land Clearance

இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரல, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம உட்பட வனப் பாதுகாப்பு அதிகாரிகள், சுற்றாடல் திணைக்கள அதிகாரிகள், காணி பயன்பாட்டு, நில அளவை உள்ளிட்ட திணைக்கள உயரிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதில் வயல் நிலப் பகுதி காணிகள், மேய்ச்சல் தரை என காணி காணப்படுகிறது.

கடவானையில் 160 ஏக்கரும், அட்டவானையில் 102 ஏக்கர் நிலப்பரப்பும் உள்ள நிலையில் உரிய காணிக்கு சொந்தமானவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையாக இவ் விஜயம் மேற்கொள்ளப்பட்டது .

காணி அனுமதிப் பத்திரமும் உள்ள நிலையில் நெற் செய்கை விவசாயத்தை மேற்கொள்ள ஒரு ஆரம்ப கட்ட நடவடிக்கையாகவும் உள்ளது.

இக் காணியை விடுவிப்புச் செய்வதன் மூலம் விவசாயத்தை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பாக அமையும்.