தாமரைக்கோபுரம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு !

0
350

தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரைக்கோபுரம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுகிறது.

தாமரை கோபுர நிர்மாணப் பணிகள் கொழும்பு மத்திய பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

சுமார் 7 வருடங்களில் இது தெற்காசியாவிலேயே பெரிய கோபுரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பார்வையிடும் வாய்ப்பு

இதற்கமைய இன்று முதல் நாட்டு மக்கள் அனைவரும் தாமரைக்கோபுரத்தினை நேரில் சென்று பார்வையிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.

அதன்படி மக்கள் கோபுரத்தின் தரை தளத்தில் அனுமதிச் சீட்டினை பெற்று பார்வையிட முடியும். 10 வயதிற்கு குறைந்தவர்களுக்கு 200 ரூபா முதல் 500 ரூபா வரையிலும், ஏனையவர்களுக்கு 500 ரூபா முதல் 2000 ரூபா வரையிலும் அனுமதிச் சீட்டுக்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாமரை கோபுரத்தை சுற்றிப்பார்க்க ஆசைப்படும் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு | Lotus Tower Tickets Colombo Lotus Tower

இதேவேளை, தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான போலி அனுமதிச் சீட்டு நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.