எழுத்துப்பிழையால் விமான நிலையத்தில் கனடிய குடும்பம் எதிர்நோக்கிய நெருக்கடி

0
393

விமான டிக்கட்டில் ஒரேயொரு எழுத்து பிழை ஏற்பட்டதனால் கனேடிய குடும்பம் ஒன்று தங்களது பயணத்தை ரத்து செய்ய நேரிட்டுள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தின் வுட்ஸ்டோக் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. லுட்விங் பெரியா மெலின்டிஸ் என்பவரும் அவரது குடும்பத்தினருமே இவ்வாறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.

பெற்றோரை பார்வையிடும் நோக்கில் பேரு நாட்டுக்கு சில வாரங்கள் செல்வதற்காக மெலின்டிஸ் குடும்பம் திட்டமிட்டிருந்தது.

தனது தந்தைக்கு வயதாகி வருவதாகவும் தன்னுடைய பிள்ளைகளை அவரிடம் காண்பிக்க ஆசைப்படுவதாகவும் மெலின்டிஸ் தெரிவிக்கின்றார்.

எனினும், விமான பயண சீட்டில் ஏற்பட்ட ஓர் எழுத்து பிழையினால் தங்களது ஒட்டுமொத்த குடும்பத்தினரதும் பயணம் தடைப்பட்டது என குற்றம் சுமத்துகின்றார்.

Perea-Melendezஎன்ற தமது பெயரின் இறுதி எழுத்துடன் மேலும் ஒரு D எழுத்து சேர்க்கப்பட்டதனால் இந்த குழப்ப நிலை உருவானது என தெரிவிக்கின்றார்.

மூன்றாம் தரப்பு பயண முகவர் நிறுவனங்களிடம் கொள்வனவு செய்த பயணச் சீட்டுக்களில் விமான சேவை நிறுவனத்தினால் திருத்தங்கள் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 24 மணித்தியாலங்கள் கால அவகாசம் இருந்தால் மட்டுமே திருத்தங்கள் செய்யப்பட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எழுத்து பிழை காரணமாக 6000 டொலர்களை இழக்க நேரிட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.