பிரான்சில் தீயில் கருகிய சிறுமிகள்!

0
698

பிரான்ஸில் Seine-et-Marne மாவட்டத்தில் உள்ள வீடொன்று திடீரென தீப்பிடித்ததில் இரு சிறுமிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. Coupvray நகரில் உள்ள வீடொன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. வீட்டில் இரு குடும்பங்கள் வசித்த நிலையில், அவர்களில் சிலர் வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

எனினும் அந்த வீட்டுக்குள் 8 மற்றும் 11 வயதுடைய இரு சிறுமிகள் சிக்கிக்கொண்டுள்ளனர். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்தடையும் முன்னர் நிலமை கைமீறிச் சென்றுள்ளது.

தீக்குள் சிக்கி குறித்த இரு சிறுமிகளும் பலியானதுடன் ஒரு பெண்ணும் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.