பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள 62,000 வாங்கும் யாழ்.எம்.பி!

0
454

தற்போதைய சூழ்நிலை காரணமாக இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகத்தை பேணுவது கடினமாக உள்ளது என்று தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் கொல்ல விரும்புகிறார்கள் என்று தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களிடம் உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். தனது நாடாளுமன்ற பதவிக்காலத்தில் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு எம்.பிக்கள் சிரமப்படுகின்றதாக தெரிவித்த சபாநாயகர், யாழ்ப்பாண மாவட்ட எம்.பி ஒருவர் ஒரு நாள் அமர்வில் கலந்துகொள்வதற்கு 62,000 ரூபாயும் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு 42000 ரூபாயும் செலவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.