புனர்வாழ்வு நிலையத்தில் கடும் மோதல்! 500இற்கும் மேற்பட்டோர் தப்பியோட்டம்

0
294

பொலனறுவை – கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகளிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். 36 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 500 இற்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பொலிஸார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.