ரஷ்யா ஒருபோதும் போரில் வெற்றி பெறக்கூடாது! பிரான்ஸ் ஜனாதிபதி

0
426

உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறக்கூடாது என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் நடைபெற்ற ‘ஜி-7’ நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் உக்ரைன் போர் விவகாரம் முக்கிய விவாத பொருளாக அமைந்தது.

ரஷ்யா ஒருபோதும் போரில் வெற்றி பெறக்கூடாது! பிரான்ஸ் ஜனாதிபதி | Russia Should Never Win The War President Macron

உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைளை தீவிரப்படுத்துவது குறித்தும் ‘ஜி-7’ தலைவர்கள் தீவிரமாக விவாதித்தனர்.

இந்த நிலையில் ‘ஜி-7’ மாநாட்டின் நிறைவில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறக்கூடாது என கூறினார்.

ரஷ்யா ஒருபோதும் போரில் வெற்றி பெறக்கூடாது! பிரான்ஸ் ஜனாதிபதி | Russia Should Never Win The War President Macron

இதுபற்றி அவர் கூறுகையில்,

” ‘ஜி-7’ நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை தேவைப்படும் வரை மற்றும் தேவையான தீவிரத்துடன் பராமரிக்க உறுதிப்பூண்டுள்ளன.

உக்ரைன் போரில் ரஷ்யாவால் வெற்றி பெற முடியாது, வெற்றி பெறக்கூடாது” என கூறினார்.