சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் பேச்சுவார்த்தை!

0
208

தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன், அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க, நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில், கொள்கை ரீதியில் தாம் இணங்குவதாக ஜனாதிபதி கடந்த தினம் அறியப்படுத்தியிருந்தார்.

இதற்கமைய, அரசாங்க மற்றும் சுயாதீன அணிகளின் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முதலாம் கட்டம் இன்று இடம்பெறும் எனத் தெரிவித்திருந்தார்.

தற்போதைய பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகியதன் பின்னர். அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணங்கியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கட்டமைப்பு, பொறுப்பு வழங்கப்படும் நபர்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய கால எல்லை என்பன குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.