பிரித்தானியாவில் இருந்து வந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் ஹிரான் அபேயசேகர!

0
62

இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலக கோரி மக்கள் இரண்டு வாரங்களுக்கு மேலாக நாட்டின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரித்தானியாவில் இருந்து தாய் நாட்டிற்கு விஜயம் செய்துள்ள ஹிரான் அபேயசேகர அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளார்.

மேலும் இவ்வாண்டு பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் சிறந்த நடிகருக்கான ஒலிவியர் விருதை ஹிரான் அபேயசேகர (Hiran Abeysekera) பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலி முகத்திடலில் அமைந்துள்ள கோட்டாகோகமவிற்கு ஹிரான் அபேயசேகர சென்று அங்கு சுத்தப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.