இந்த ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம்…!!

0
35

இந்த ஆண்டுக்கான முதல் சூரிய கிரகணம் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற உள்ளதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி நல்லிரவு 12.15 மணிக்கு தொடங்கி அதிகாலை 4.08 மணி வரை நிகழ உள்ளது. இது பகுதி நேர சூரிய கிரகணம் என்பதால் இதனை இந்தியாவில் காண முடியாது.

பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக், தென் ஆப்பிரிக்காவின் தென் மேற்கு பகுதி, அண்டார்டிகா போன்ற இடங்களில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்கலாம்.

அதோடு இந்த ஆண்டிற்கான இரண்டாவது சூரிய கிரகணம் வருகிற அக்டோபர் மாதம் 25ஆம் தேதி நிகழவுள்ளது. இதுவும் பகுதி நேர சூரிய கிரகணம் என்பதால் இந்தியாவில் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.