70 கோடி ரூபாய்க்கு ஏலம் போன நம்பர் பிளேட்!

0
46

வாகன எண்ணிற்கான ஏலம் விடும் நிகழ்ச்சியில் 70 கோடி ரூபாய்க்கு நம்பர் பிளேட் ஒன்று ஏலம் போன நிகழ்வு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

துபாயில் மோஸ்ட் நோபல் நம்பர்ஸ் அறக்கட்டளை சார்பாக சிறந்த வாகன நம்பர் பிளேட் மற்றும் மொபைல் எண்களை ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். அப்போது AA8 என்ற ஒற்றை எண் வாகன நம்பர் பிளேட் ஏலம் விடப்பட்டது.

துபாயில் ஒற்றை எண் நம்பர் பிளேட் மிகவும் பிரசித்து பெற்றது.

அந்த வகையில், துபாய் மதிப்பில் 53 மில்லியன் திரஹம்க்கும், இந்திய மதிப்பில் 70 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

இதற்கு முன் AA9 என்கிற நம்பர் பிளேட் 79 கோடிக்கு ஏலம் போனது அதிக விலையாக பார்க்கப்பட்டது.

அதேவேளை இந்த ஏலத்தில் AA8 நம்பர் பிளேட் உலகத்திலேயே 3 வது விலை உயர்ந்த எண்ணாக 70 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

Gallery