ஆப்கானில் தலீபான்கள் விதித்த மற்றொரு தடை!

0
521

ஆப்கானிஸ்தானில் டிக் டாக் மற்றும் பப்ஜி ஆகிய செயலிகளுக்கு தலீபான்கள் தடை விதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சியை கைப்பற்றிய தலீபான்கள் பல்வேறு கடுமையான சட்ட திட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர்.

பெண்கள் கல்வி கற்க தடை தலீபான்கள் தடை விதித்தற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த நிலையில், தற்போது பொழுதுபோக்கு அடக்குமுறை என்று கூறப்படும் வகையில் டிக் டாக் மற்றும் பப்ஜி ஆகிய செயலிகளுக்கு தலீபான்கள் அரசு தடை விதித்துள்ளது.

இளைஞர்கள் வழிதவறி செல்லும் வகையில் இந்த செயலிகளின் பயன்பாடு இருப்பதாக கூறி தலீபான்கள் தடை விதித்துள்ளனர்.

ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் பொழுது போக்கு அம்சங்கள் பலவற்றிற்கு தலீபான்கள் தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு மிக மோசமான வாழ்க்கை தரம் இருப்பதாக 94 சதவீத ஆப்கானிஸ்தானியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.