ரம்புக்கனை சம்பவம் வரலாற்றில் மிக மோசமான நிகழ்வாக பதிவு

0
273

ரம்புக்கனையில் எரிபொருள் தொடர்ந்து விலை அதிகரிப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 13 பேர் காயமடைந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் பல தசாப்த்தங்களின் பின்னர் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பல வார ஆர்ப்பாட்டங்களின் இடையில் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது துப்பாக்கி பிரயோகமாகும்.

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் அதிகாரி 15 பேர் சிறிய காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிற்கு 90 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ரம்புக்கனை பிரசேத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயில் வீதியை மறிந்து செயற்பட்ட போது பொலிஸார் விடுத்த எச்சரிக்கையை கண்டுக்கொள்ளாமல் இருந்தமையால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நிலைமையை கட்டுப்பாடுத்துவதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் அதில் சிலர் காயமடைந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் Reuters செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கற் தாக்குதல் மேற்கொண்டவர்களை துரத்துவதற்காக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மேலும் 3 பேர் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல் நிலை குறித்து கண்கானிக்கப்பட்டு வருவதாகும் கேகாலை அரச வைத்தியர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸார் கற் தாக்குதல்களினால் மிக சிறிய அளவில் காயமடைந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.