உக்ரைனை மோசம் செய்த நேட்டோ!

0
449

உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி காலாவதியான ஆயுதங்களை நேட்டோ நாடுகள் உகரைனுக்கு வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை ஐ.நா-வுக்கான ரஷ்யப் பிரதிநிதி வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் போர் தொடுத்து 55 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், கிழக்கு உக்ரைன் முழுவதும் வான்வழித் தாக்குதல்களை நடத்திய பின்னர், கீவ் நகரில் மீண்டும் தாக்குதலை நடத்த ரஷ்யப் படைகள் திட்டமிட்டுள்ளன.

இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் மரியுபோல் ரஷ்யாவின் கட்டுக்குள் வந்துவிடும் என ஐரோப்பிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden), பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜொன்சன் (Boris Johnson), கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) ஆகியோர் உக்ரைனுக்கு பீரங்கிகளை வழங்க உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.