இலங்கையைத் தொடர்ந்து IMFஇன் உதவி கோரும் உக்ரைன்!

0
517

 உக்ரைனின் நாட்டின் மறுசீரமைப்பு குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உக்ரைன் அதிபர் விளாமிடிர் செலன்ஸ்கி ( Volodymyr Zelensky) பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

IMF நிர்வாக இயக்குனர் Kristalina Georgieva உடனான கலந்துரையாடல் தெளிவான திட்டங்களை வகுத்துள்ளதாக உக்ரைன் அதிபர் விளாமிடிர் செலன்ஸ்கி  ( Volodymyr Zelensky)     கூறினார்.

அதேவேளை ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர், உக்ரைன் போருடன் தொடர்புடைய பற்றாக்குறையை ஈடுகட்ட IMF மற்றும் G7 நாடுகளிடம் $50bn (£38bn) கேட்கும் என கூறுகின்றார்.

இந்நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் அடுத்த வாரம் வாஷிங்டன் டிசியில் நடைபெறும் IMFமற்றும் உலக வங்கி கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

இதேவேளை, இலங்கை பொருளாதார நிலை ஸ்திரத்தன்மையை இழந்துள்ள நிலையில், இறுதியில் IMFஇன் உதவியை நாடியுள்ள நிலையில், உக்ரைனும் IMFஇன் உதவியை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.