ஆப்கான் வானொலி நிலையங்களுக்கு பூட்டு!

0
437

ஆப்கானிஸ்தானில் புகழ்பெற்ற மேலும் இரு வானொலி நிலையங்கள் தமது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளன.

ஆப்கான் கடும் பொருளாதார சவாலுக்கு முகம்கொடுத்திருக்கும் நிலையில் வானொலி நிலையங்கள் தமது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளன.

தென்கிழக்கு மாகாணமான பக்தியாவில் 11 ஆண்டுகளாக ஒலிபரப்பாகும் ரேடியோ பக்தியா காக் மற்றும் வடக்கு மாகாணமான பர்யாப்பில் 10 ஆண்டுகளாக ஒலிபரப்பாகும் ரேடியோ மைமானா ஆகிய வானொலி சேவைகளே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த இரு நிலையங்களும் கடந்த வாரம் தனது செயற்பாட்டை நிறுத்தின. மேலும் ஆப்கானில் முன்னாள் அரசு வீழ்ந்தது தொடக்கம் பல டஜன் ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதாக தரவுகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.