கூலி டீசல் சர்ச்சைக்கு ரஜினிகாந்த் பதில்: இசையமைப்பாளர் – தயாரிப்பாளர் பிரச்சனை

0
41

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் டீசரில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து ரஜினிகாந்த் விமானநிலையத்தில் பேட்டி அளித்துள்ளார்.

அண்மையில் கூலி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த டீசரில் இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த் நடித்த தங்கமகன் படத்தில் வரும் வா வா பக்கம் வா பாடலை மறுஉருவாக்கம் செய்து பயன்படுத்தப்பட்டு இருந்தது.

இந்த டீசர் இணையத்தில் டிரெண்டான நிலையில், கூலி படத்தில் தனது பாடலை உரிய அனுமதி பெறாமலும், ராயல்டி செலுத்தாமலும் பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பு சன் பிக்சர்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்த வேண்டும் அல்லது பாடலை நீக்க வேண்டும் என்றும் அல்லது டீசரில் இருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பை படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம், கூலி படத்தின் டீசரில் வா வா பக்கம் வா பாடல் பயன்படுத்தியது தொடர்பாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்யுள்ளனர்.

காப்புரிமை விவகாரம் என்பது இசை அமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் உள்ள பிரச்சினை என நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார். விரைலவில் இந்த விவகாரம் முடிவுக்கு வருமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.