அமெரிக்காவில் பாரிய விபத்து: இருவருக்கு பரிதாபமாக பலி!

0
36

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வாகனம் மீது ரயில் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் 17-04-2022 இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹாரிஸ் கவுன்டி வடகிழக்கு பகுதியில் ரயில் ஒன்று நியூ ஆர்லியன்ஸ் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி நேற்றிரவு சென்று கொண்டிருந்தது.

ஹூஸ்டன் ரயில் நிலையத்தில் இருந்து 12 மைல்கள் தொலைவில் ரயில் வந்தபோது, இரவு 8 மணியளவில் அந்த வழியே சென்ற வாகனம் ஒன்று தண்டவாளத்தில் கடக்க முயன்றபோது, விபத்தில் சிக்கியது.

இதில், ரயில் பயணிகள் 81 பேருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், ரயில் மோதிய வேகத்தில் வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதில், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஆண் மற்றும் பெண் என இருவர் உயிரிழந்துள்ளனர். இதனை ஹாரிஸ் கவுன்டியின் ஷெரிப், எட் கொன்சாலஸ் செய்தியாளர்களிடம் உறுதி செய்துள்ளார்.