5 ஆண்டுகளுக்கு பிறகு வைரலாகும் எலான் மஸ்கின் டுவிட்டர் பதிவு!

0
313

எலான் மஸ்க் டுவிட்டரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

2017ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவது தொடர்பான பதிவே இவ்வாறு வைரலாகி வருகின்றது.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பாராகவும் இருப்பவர் எலான் மஸ்க். (Elon Musk)

இவர் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இணைய இருக்கிறார் என தகவல்கள் வெளியானது.

பின்னர் மஸ்க் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள 9% டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதை அடுத்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மஸ்கை டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணைத்தார்.

பின்னர் கடந்த 11-ஆம் தேதி எலான் மஸ்க் டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணைய வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் தெரிவித்தார்.

டுவிட்டர் பங்குகளை வாங்குவதற்கான தொகை குறித்து நடந்த கருத்து வேறுபாட்டால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் மஸ்க் மீண்டும் டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்க முன்வந்தார்.

இதற்காக இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாயை அவர் இறுதியாக செலுத்தி டுவிட்டர் பங்குகளை வாங்க தயாராக இருப்பதாகவும் இந்த தொகையும் மறுக்கப்பட்டால் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இணைய போவதில்லை எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.

அதாவது ஒரு பங்கிற்கு இந்திய மதிப்பில் சுமார் 4 ஆயிரம் வரை வழங்க மஸ்க் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மஸ்கின் இந்த முடிவுக்கு டுவிட்டர் நிறுவனம் தரப்பில் ” மஸ்கின் கோரிக்கை மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.