கனடாவில் 7 வயது மகன் உட்பட தனது குடும்பத்தினரை ஈவு இரக்கமின்றி கொன்ற கொடூரன்!

0
40

கனடாவில் பெற்றோர் மற்றும் மகனை கொலை செய்த Saskatchewan மாகாணத்தை சேர்ந்தவர் நாதனீல் கேரியர் (Nathaniel Carrier) எனும் நபருக்கு மூன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் தனது தந்தை டெனிஸ் கேரியர் (56), தாயார் சாண்ட்ரா ஹென்ரி (56) மற்றும் மகன் பெண்ட்லி (7) ஆகியோரை கொலை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்டார்.

Gallery

நாதனீல் கேரியர் நடத்திய தாக்குதலில் 5 வயதான மகள் கேண்ட்ரா மட்டும் உயிர் பிழைத்த நிலையில் அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி நாதனீஸிக்கு (Nathaniel Carrier ) மூன்று ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் 25 ஆண்டுகளுக்கு அவருக்கு பரோல் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நாதனீஸ் (Nathaniel Carrier) துப்பாக்கிகளை வைத்திருப்பதில் இருந்து வாழ்நாள் தடை பெற்றுள்ளார்.

Gallery