ஜிம்பாப்வேயில் பேருந்து விபத்து: தேவாலயத்திற்குச் சென்ற 35 பேர் பலி!

0
41

கிழக்கு ஜிம்பாப்வேயில் உள்ள சிமானிமானி நகருக்கு அருகே 100 க்கும் மேற்பட்ட சீயோன் கிறிஸ்தவ தேவாலய உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் வியாழக்கிழமை (14-04-2022) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த விபத்து சம்பவத்தில் 35 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும் 71 பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணையில் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாட பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.

ஜிம்பாப்வேயில் சமீபத்திய ஆண்டுகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது,

ஆனால் அதற்கான சாலை பராமரிப்பு பணிகள் எதுவும் இல்லை என்று ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.