ரஷ்ய நகரங்களில் குண்டுகளை வீசிய உக்ரைன்!

0
432

ரஷ்யாவின் எல்லையோர நகரங்களில் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைனின் இந்த தாக்குதலில் குழந்தை உட்பட 7 பேர் காயம் அடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய விசாரணை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், கனரக ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு ரஷ்ய வான் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த உக்ரைனின் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள், Bryansk பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களின் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிகார பூர்வமாக ரஷ்யா குற்றம்சாட்டியது இதுவே முதல் முறையாகும்.

ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டை உக்ரைன் நிராகரித்துள்ளது.