முதன்முறையாக சுற்றுலாப்பயணிகளை முழுமையாக வரவேற்க தயாராக உள்ள கனடா .. தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்!

0
321

பெருந்தொற்று துவங்கியதற்குப் பிறகு, முதன்முறையாக கனடா முழுமையாக சுற்றுலாப்பயணிகளை வரவேற்க தயாராக உள்ளது.

2020ஆம் ஆண்டு, மார்ச் மாதம் கனடா சுற்றுலாப்பயணிகளுக்கு பயணக்கட்டுப்பாடுகளை விதித்தது.  

2021 கோடைவாக்கில், முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்ற சுற்றுலாப்பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. 

ஏப்ரல் 1ஆம் திகதி முதல், முழுமையாக தடுப்பூசி பெற்ற சுற்றுலாப்பயணிகள் கனடாவுக்குள் நுழைவதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டியடில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக, கனடாவுக்கு வருவதை கனடா அரசு மிகவும் எளிதாக்கியுள்ளதால், சுற்றுலாப்பயணிகளுக்கு இது ஒரு நற்செய்தியாக அமைந்துள்ளது.

இந்நிலையில், கனடாவுக்கு சுற்றுலா வருவோர் ஒரு விடயத்தைக் கவனத்தில் கொள்வது நல்லது. அதாவது, கனடாவுக்கு சுற்றுலா வருவோருக்கு குற்றப்பின்னணி ஏதாவது இருந்தால், அவர்க கனடாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

கனடாவுக்கு சுற்றுலாப்பயணிகள் அவசியம் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆகவே, குற்றப்பின்னணி கொண்டவர்கள், அதை மேற்கொள்வதற்கும் கனடா அரசு சில வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது.

முதல் தீர்வு, தற்காலிக வாழிட அனுமதி. கனடாவுக்குள் நுழையும் ஒருவர் தொழில் ரீதியாக ஆனாலும் சரி, அல்லது இரக்கத்தின் அடிப்படையிலானாலும் சரி, உங்கள் குற்றப்பின்னணி தற்காலிகமாக மன்னிக்கப்படவேண்டும் என்பதற்காக வாதம் முன்வைக்க தற்காலிக வாழிட அனுமதி ஒரு தீர்வாக அமையும்.

இரண்டாவது தீர்வு, குற்றவியல் புனர்வாழ்வு (Criminal Rehabilitation) ஆகும். தற்காலிக வாழிட அனுமதியைப் போலில்லாமல், இந்த குற்றவியல் புனர்வாழ்வுக்கு விண்ணப்பிப்பது நிரந்தர ஒரு தீர்வாக அமையலாம்.

உங்கள் குற்றவியல் புனர்வாழ்வு விண்ணப்பதை கனடா ஏற்றுக்கொண்டால், நீங்கள் கனடா வருவதற்கு உங்கள் குற்றவியல் பின்னணி தடையாக இருக்காது (நீங்கள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடாமல் இருக்கும்வரை).

மூன்றாவது தீர்வு, சட்ட ஆலோசகர் ஒருவரின் கடிதம். கனேடிய புலம்பெயர்தல் சட்டத்தரணி ஒருவர் உங்கள் குற்றப்பின்னணி குறித்து சட்டப்பூர்வமாக சுருக்கமாக குறிப்பிட்டு, நீங்கள் ஏன் கனடாவுக்குள் அனுமதிக்கப்படவேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பார்.

இந்த மூன்று விடயங்களும், குற்றப்பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும், நீங்கள் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட உங்களுக்கு உதவக்கூடும்.