முதல்முறையாக சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார் சத்யராஜ்

0
757

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் சூர்யா. இவர் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

நடிகர் சத்யராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் மூலம் நடிகர் சத்யராஜ், சூர்யாவுடன் முதன்முறையாக இணைந்துள்ளார். சூர்யா 40 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.