பிச்சை எடுத்த பெண்ணை சிறையிலடைத்த சுவிட்சர்லாந்து மீது ஐரோப்பிய நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

0
701

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் பிச்சை எடுத்த ஒரு பெண்ணுக்கு 500 சுவிஸ் ப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது.

அவரால் அபராதத்தை செலுத்த இயலவில்லை என்பதால் அந்த பெண் ஐந்து நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார்.

சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவில் 60 ஆண்டுகளாக பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிச்சை எடுப்பவர்களையும், சில நேரங்களில் குழந்தைகளையும் சிலர் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதை தடுப்பதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக விவாதங்கள் முன்வைக்கப்படுவதுண்டு.

என்றாலும், இந்த பெண்ணின் விடயத்தில் குற்றச்செயலுக்கு எதிராக போராடும் நோக்கிலோ, அல்லது பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலோ இந்த தண்டனை விதிக்கப்படவில்லை என ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் முடிவுசெய்துள்ளது.

தனது வறுமையை பிச்சை எடுத்தாவது எதிர்கொள்ள தீர்மானித்த அந்த பெண்ணுக்கும், மனிதன் என்ற முறையில், கௌரவம் என்று ஒன்று உள்ளது என்று கூறியுள்ளது நீதிமன்றம்.

ஆகவே, அந்த பெண்ணுக்கு இழப்பீடாக 922 யூரோக்கள் செலுத்த ஜெனீவாவுக்கு ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.