கல்லறையை சுத்தம் செய்த நபருக்கு கிடைத்த பெரும் புதையல்… நீதிமன்றம் அளித்துள்ள ஏமாற்றம்

0
546

ஜேர்மனியில் கல்லறை ஒன்றை சுத்தம் செய்துகொண்டிருந்த ஒருவருக்கு கிடைத்தன.

Dinklage என்ற நகரில், வேர்களையும் புதர்களையும் அகற்றிக்கொண்டிருந்த ஒருவர், பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் தங்க நாணயங்களும் பணமும் இருப்பதைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்தார்.

மறு நாள் வேறு சில பணியாளர்களுக்கும் தங்க நாணயங்கள் அடங்கிய கண்டெய்னர்கள் கிடைத்தன.

கிடைத்த புதையலின் மொத்த மதிப்பு 500,000 யூரோக்கள் என மதிப்பிடப்பட்டது. பொதுவாக இதுபோல் புதையல் கிடைக்கும்போது, அதன் உண்மையான உரிமையாளர் உரிமை கோராவிட்டால், புதையலைக் கண்டெடுத்தவருக்கு புதையலில் பாதியைக் கொடுக்கவேண்டும் என்பது ஜேர்மன் சட்டம்.

ஆனால், அந்த புதையலைக் கண்டெடுத்தவருக்கு அதில் பாதி கொடுக்கப்படவில்லை. ஆகவே, அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கண்டெடுக்கப்பட்ட அந்த நாணயங்களில் சில 2016ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டவை. ஆகவே, யாரோ சமீபத்தில்தான் அதை மறைத்துவைத்திருக்கிறார்கள், அது புதையல் அல்ல என்று கூறிவிட்டது நீதிமன்றம்.

இது தொலைந்து போன பொருள் அல்ல, ஆகவே, அதைக் கண்டுபிடித்தவருக்கு அதில் பங்கு தர முடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்டதால் ஏமாற்றம் அடைந்துள்ளார் அவர்.