கொரோனா வைரஸ் தாக்கிய ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுமா?

0
500

சமீபத்திய ஆய்வொன்றில் கொரோனா வைரஸ் தாக்கிய ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் என்று தகவல் வெளிவந்தது.

இது தொடர்பாக ஜெர்மனியில் உள்ள ஜஸ்டஸ்லைபிக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பெக்சாத் மாலோகி மற்றும் பக்தியார் டார்டிபியன் ஆகிய இருவரும் கொரோனா கருவுறுதலில் நிகழ்த்தும் எதிர்மறையான தாக்கம் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தி இருக்கிறார்கள்.

அதிலே கொரோனா வைரஸ் தாக்கிய ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படக்கூடும் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

அந்தவகையில் தற்போது இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.

ஆய்வு கூறுவது என்ன?

கொரோனா பாதித்தால் ஆண்களின் விந்து செல்களில் வீக்கம் மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தம் அதிகரித்து காணப்படும்.
இந்த வேதியியல் ஏற்றத்தாழ்வு உடலில் உள்ள டி.என்.ஏ. மற்றும் புரதங்களை சேதப்படுத்தும்.
விந்தணுக்களில் ஏற்பட்டுள்ள இந்த விளைவுகள் அதன் தரம் மற்றும் கருவுறுதல் திறனுடன் தொடர்புடையவை. இது விந்தணு உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கொரோனா வைரசின் தாக்கம் உடலின் முக்கிய உறுப்புகளை பாதிப்பது மட்டுமல்ல நுரையீரல் திசுக்களை அணுகுவதற்கு வைரஸ் பயன்படுத்தும் அதே ஏற்பிகள் விந்தணுக்களிலும் காணப்படுகின்றன. இது ஆணின் இனப்பெருக்க உறுப்புகளையும் பாதிக்கும்.
விந்து உயிரணுவின் வளர்ச்சியையும் குறைக்கும். மேலும் இனப்பெருக்க ஹார்மோன்களையும் சீர்குலைக்கின்றது.