பெல்ஜியத்தில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய வகை கொரோனா

0
427

பெல்ஜியத்தில் கடந்த ஒரு வாரத்தில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இருமடங்காகத் தாக்கியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெல்ஜியத்தில் கொரோனா அதிகரிப்பு வீதம் 128 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதில் 41 சதவீதம் இளம் வயதினருக்கு இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

தற்போது பெல்ஜியத்தில், கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவுக்கு மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் கடந்த ஒரு வாரமாக 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகம் தாக்கியுள்ளது.

இந்த புதிய வகை கொரோனா தாக்கம், பெரும்பாலும் பாடசாலைகளிலும், நேரடி பிரசாரங்களிலும் பரவியிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.