6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் விரைவில் இந்தியா வரும் போக்கோ ஸ்மார்ட்போன்

0
375

போக்கோ பிராண்டு இந்தியாவில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 2 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டாட் டிராப் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி ரேம், அதிகபட்சம் 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், முன்புறம் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டு-டோன் டிசைன், பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

போக்கோ எம்3 மொபைலி சிறப்பம்சங்கள்

  • 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 LCD ஸ்கிரீன்
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
  • டூயல் சிம்
  • ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
  • அட்ரினோ 610 GPU
  • 4 ஜிபி LPPDDR4x ரேம்
  • 64 ஜிபி (UFS 2.1) / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
  • 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
  • 2 எம்பி டெப்த் கேமரா
  • 2 எம்பி 4cm மேக்ரோ கேமரா, f/2.4
  • 8 எம்பி செல்பி கேமரா, f/2.05
  • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
  • 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
  • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
  • யுஎஸ்பி டைப் சி
  • 6000 எம்ஏஹெச் பேட்டரி
  • 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

இந்தியாவில் புதிய போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் விலை அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.