மாணவர்கள் வடிவமைத்த செயற்கைகோள்

0
442

கோவை கல்லுாரி மாணவர்கள் தயாரித்த செயற்கைகோள்கள், பிப்ரவரி 28ஆம் தேதியன்று, ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து, விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

கோவை, நீலாம்பூர், ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் சொந்தமாக வடிவமைத்த செயற்கைகோளை விண்ணில் செலுத்த உள்ளனர். கல்லுாரி வளாகத்தில் செயற்கைகோள் தரைதள கண்காணிப்பு நிலையம் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

‘வீடியோ கான்பரன்சிங்’ முறையில் பங்கேற்ற, ‘இஸ்ரோ’ தலைவர் சிவன், தரைதள கண்காணிப்பு நிலையத்தை துவக்கி வைத்து பேசுகையில், ”கல்லுாரி மாணவர்கள் வடிவமைத்துள்ள செயற்கைகோள், ‘இஸ்ரோ’ தளத்தில் இருந்து ஏவப்படுவது மிகவும் பாராட்டத்தக்கது. விண்வெளி ஆராய்ச்சிகளில் வரும் நாட்களில் நம் நாட்டில் அதிகளவு மாணவர்களின் பங்களிப்பு இருக்கும். கோவை, சென்னை மற்றும் நாக்பூர் பகுதிகளை சேர்ந்த, மூன்று கல்லுாரிகளின் மாணவர்கள் தயாரித்துள்ள செயற்கைகோள்கள், பிப்ரவரி 28ஆம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட உள்ளது. இவை அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பதால் கூடுதல் சிறப்பு,” என்றார்.