59 செயலிகள் மீது நிரந்தரத் தடை .. இந்திய ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு

0
441

2020ல் மத்திய அரசு இந்திய மக்களின் தகவல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சுமார் 59 சீன செயலிகளைத் தற்காலிகமாகத் தடை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தற்போது சுமார் 59 செயலிகள் மீது நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவால் 59 செயலிகளில் அதிக வாடிக்கையாளர்களை வைத்திருந்த ஷாட் வீடியோ செயலியான டிக்டாக் மற்றும் ஹலோ ஆகியவற்றின் தாய் நிறுவனமான பையிட் டான்ஸ் இந்திய ஊழியர்களைப் பணிநீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் 20,000க்கு அதிகமான ஊழியர்கள் சீன நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் டிக்டாக் மற்றும் ஹலோ செயலியில் பணியாற்றிய 2000 ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு வருகிற ஜனவரி 29ஆம் தேதி தான் கடைசி நாளாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.