இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க இடத்துக்குச் சென்ற 23 பேருக்கு கொரோனா

0
379

இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஒன்றான சிகிரியாவுக்கு சுற்றுலா சென்ற 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மத்துகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொன்துபிட்டி பிரதேசத்தில் இருந்து சிலர் கடந்த தினம் சீகிரியாவிற்கு சுற்றுலாப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் சுற்றுலாவில் கலந்து கொண்ட 22 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பிரதேசத்திலேயே மீகம தொழிற்பேட்டையில் மர உற்பத்தி நிறுவனமொன்றில் இந்திய நாட்டவர் ஒருவர் உட்பட 75 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் நிறுவனத்திற்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொற்றாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், வெலிமடை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பிரதேசத்தில் நேற்று மேலும் 10 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த தொற்றாளர்களுக்கு இடையில் 3 மற்றும் 7 வயதுடைய இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.