கண்டி, யாழ்ப்பாணத்தில் இரண்டு மேம்பாலங்கள்!

0
601

கண்டி கெட்டம்பே, யாழ்ப்பாணம் கிளாலி ஆகிய பகுதிகளில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

வெளிவட்ட பெருந்தெரு அத்துருகிரியவுடன் தொடர்புபடும் வகையில் இராஜகிரிய ஊடாக களனி புதிய பாலம் வரை கொங்கிரிட் தூண்களைக் கொண்டு நிர்மாணிக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையை (Elevated Expressway) அமைப்தற்கு நேற்று முன்தினம் (25) நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தின் பேது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதுதொடர்பாக தெரிவிக்கையில், இதன் கீழ் இராஜகிரிய ஊடாக வெளிவட்ட பெருந்தெருவில் அத்துருகிரிய இடைமாறு பிரதேசம் வரை கொங்கிரிட் தூண்களைக் கொண்டமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையால் சாத்தியவள ஆய்வுக்கற்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

மின்சாரத்தை களஞ்சியப்படுத்தும் மின் நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பான சாத்தியக்கூற்று ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சரவை துணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி வெளியிடப்பட்ட நிலக்கரி விலைமனுக் கோரளை நிராகரித்து, புதிய விலைமனு கோரப்பட்டதாக எதிர்க்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டை அமைச்சர் நிராகரித்தார்.

நீதி வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்குடன் நாடு பூராகவும் மேலும் 100 நீதிமன்ற கட்டடங்கள் அமைக்கப்படவிருக்கின்றன. பேலியகொட, பொரல்லை பிரதேசங்களில் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவிருக்கின்றன.

அரசாங்க திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவவும் இந்த செய்தியாளர் மகாநாட்டில் கலந்துகொண்டார்.