சில்லு கருப்பட்டி படத்தில் நடித்த ஸ்ரீராம் காலமானார்

0
452

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான அந்தாலஜி படம் “சில்லுக்கருப்பட்டி. இந்த படத்தின் மூன்றாவது கதையில் லீலா சாம்சன் ஜோடியாக நவநீதனாக நடித்தவர் ஸ்ரீராம்.

தற்காப்பு கலையின் நிபுணராக இருக்கும் ஶ்ரீராம், இன்று பயிற்சி செய்யும் போது தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

ஶ்ரீராம் தமிழக காவல்துறை கமாண்டோ படை மற்றும் சென்னை மாநகர காவல்துறையினருக்கு தற்காப்பு கலையை கற்பித்து வந்தார். பெண்களின் பாதுகாப்புக்கான பட்டறைகளையும் நடத்தி வந்தார்.