ரெட்மி நோட் 10 சீரிஸ் எப்போது வெளிவரும்?

0
553

சியோமி நிறுவனம், ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இப்போதுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு சியோமி புதிய நோட் 10 மாடல்களின் விலையை போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

இந்தியாவில் ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ 4ஜி வேரியண்ட் மட்டும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் அடுத்த மாதம் வாக்கில் அறிமுகமாகும் என தெரிகிறது. இரு மாடல்களும் கிரே, வைட் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கும்.

ரெட்மி நோட் 10 சீரிஸ் மட்டுமின்றி சியோமி நிறுவனம் எம்ஐ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களையும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் கொண்டிருக்கும்.