டோனியுடன் என்னை ஒப்பிடாதீர்கள் – ரிஷாப் பண்ட்

0
575

டெல்லி வந்திறங்கிய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம், உங்களை டோனியுடன் ஒப்பிட்டு பேசுகிறார்களே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குரிஷாப் பண்ட் கூறுகையில், ‘டோனி போன்ற மிகச்சிறந்த வீரருடன் என்னை நீங்கள் ஒப்பிட்டு பேசுவது மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கிறது.

ஆனால், எந்த வீரருடனும் என்னை ஒப்பிட விரும்பவில்லை. இந்திய கிரிக்கெட்டில், எனக்கென்று தனி அடையாளத்துடன், நான் நானாக இருக்க விரும்புகின்றேன். டோனி போன்ற ஜாம்பவான்களுடன் என்னைப் போன்ற சிறிய விளையாட்டு வீரர்களை ஒப்பிடுவது நல்ல விஷயம் அல்ல என்றார் ரிஷாப் பண்ட்.