இராணுவ வசமுள்ள காணிகளை டிசெம்பர் 31 க்குள் விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு!

0
476

வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை டிசெம்பர் 31ஆம் நாளுக்கு முன்னர், உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். President Maithri Order Release Tamils And Sri Lanka Tamil News

வடக்கு, கிழக்கு அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கான கூட்டம் நடைபெற்ற போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த கூட்டத்தில், காணிகள் விடுவிப்பில் காணப்படும் இழுபறி, மகாவலி எல் வலய அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில், முல்லைத்தீவு,வவுனியா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பில் பதிலளித்த ஜனாதிபதி, இது தொடர்பான திட்டத்தை காலவரம்புடன் செயற்படுத்துமாறும், இதன் முன்னேற்றங்கள் தொடர்பாக, அடுத்தமாதம் நடக்கும் செயலணிக் கூட்டத்தில் தெரியப்படுத்துமாறும் சிறிலங்கா அதிபர் பணித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்! மஹிந்த அறிவிப்பு!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!

25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்! அமைச்சர் சஜித்!

மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!

Tamil News Live

Tamil News Group websites