தமிழகத்தில் தொடர் மழை; 06 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை

0
113
School collages remains holiday 5 districts after

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கும், இரு மாவட்டங்களில் பாடசாலை, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. (School collages remains holiday 5 districts after)

தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் இலட்சத்தீவு பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

கடலோரப் பகுதிகளில் ஏற்படும் மேலடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கன மழை பெய்யும் என்றும் அதன்பின்னர் மேலும் 3 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தது.

தமிழகத்தில் எதிர்வரும் 7 ஆம் திகதி அதீத கன மழைக்கான வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது.

தொடர்மழை காரணமாக சென்னை, நெல்லை, தூத்துக்குடி, காரைக்கால் மாவட்டங்களில் பாடசாலைக்கும், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; School collages remains holiday 5 districts after