இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்!

0
344
832 people died Indonesia tsunami

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் கொல்லபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் மூன்று பிரெஞ்சு நபர்களும் இருக்கலாம் என கூறப்படுகிறது. 832 people died Indonesia tsunami

இந்தோனேஷியாவின் Celebes தீவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோசமான நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பலர் கொல்லப்பட்டனர். இதுவரை கணக்கெடுப்பின்படி, 832 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் காணாமல் போனோர் விபரங்கள் சேமிக்கப்பட்டு வருகின்றது. இவர்களில் 71 வெளிநாட்டவர் எனவும், அவர்களில் மூவர் பிரெஞ்சு குடியுரிமை கொண்டவர்கள் எனவும் அவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி மக்ரோன் தனது ஆதரவை இந்தோனேஷிய மக்களுக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ‘பிரான்ஸ் இந்தோனேஷியாவுக்கு ஆதரவாக உள்ளது. அதிகாரிகளுடம் தொடர்புகொண்டு அவர்களுக்கு தேவையான உதவியினை செய்ய தயாராக இருக்கின்றோம்!’ என எலிசேயில் இருந்து வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவுக்கான பிரெஞ்சு தூதரகம் காணாமல் போன பிரெஞ்சு நபர்கள் குறித்து எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. உத்தியோகபூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும் என அரச பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஐஸ்வர்யாவால் தானாம் ரித்விகா வெற்றி பெறப்போகிறாரம்…!
பிரான்ஸில் Les Halles பகுதியில் இடம்பெற்ற மோசமான தீ விபத்து!
பரிஸில், வீட்டை விட்டு வெளியேற பயப்பிடும் பெண்கள்!
20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்!
பிரான்ஸில் நடு வீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற பாலியல் பலாத்காரங்கள்….!
பிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…!
எமது ஏனைய தளங்கள்