பிரதமர் மோடிக்கு ஐ.நா வின் சுற்றுச்சூழல் விருது

0
491
India PM Modi gets UNs highest environmental honour

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படவுள்ளதென ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. (India PM Modi gets UNs highest environmental honour)

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமையேற்று வழி நடத்துவதற்காகவும், எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிப்போம் என்று உறுதியேற்றதற்காகவும் பிரதமர் மோடிக்கு ஐ.நா சபையின் சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் முக்கிய பங்காற்றியதற்காக உலக அளவில் 6 பேர் இந்த ஆண்டு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண துணிச்சலாகவும், புதுமையாகவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்ட அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் இந்த விருது அவர்களுக்கு அளிக்கப்படுவதாகவும் ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 6 பேர் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளுக்கு ‘சாம்பியன்ஸ் ஒப் தி எர்த்’ என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகிலேயே முதல் முறையாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, முற்றிலும் சூரிய மின்சக்தி மின்சாரத்தை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட கொச்சி விமான நிலையத்துக்கும் விருது வழங்கப்படவுள்ளது என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; India PM Modi gets UNs highest environmental honour