தூத்துக்குடி மாணவி சோபியா மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்…!

0
475
tuticorin student sophia human rights commission india tamil news

நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு திங்கட்கிழமை மாணவி சோபியா மற்றும் அவருடைய தந்தை ஆஜராகினர்.tuticorin student sophia human rights commission india tamil news

தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்த கனடா ஆராய்ச்சி மாணவி சோபியா கடந்த செப். 3 ஆம் தேதி விமானம் மூலம் சென்னை யில் இருந்து தூத்துக்குடி வந்தார்.

அதே விமானத் தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வந்தார், அப்போது விமானத்தில் பாஜகவுக்கு எதிராக சோபியா முழக்க மிட்டார்.

இது தொடர்பாக சோபியாவுக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே தூத்துக்குடி விமான நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து சோபியாவை கைது செய்தனர், பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் சோபியா வின் தந்தை டாக்டர் சாமி,மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘பாஜக வினர் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த தாகவும், காவல்துறையினர் பல மணி நேரம் விசார ணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததாகவும்’ கூறி யிருந்தார்.

இதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஆணைய நெல்லையில் நடைபெறும் மனித உரிமை ஆணையத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜராகும் படி மாணவி சோபியா மற்றும் அவரது தந்தை சாமி, புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் திருமலை ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது.

அதன் பேரில் மாணவி சோபியா, அவரது தந்தை டாக்டர் சாமி ஆகியோர் நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு திங்க ளன்று காலை ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

மேலும் அவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை மனுக்களாகவும் தாக்கல் செய்தனர். ஆய்வாளர் திரு மால் ஆஜராகவில்லை.

மாணவி சோபியா தனது தந்தையுடன் ஆஜராக வந்த தால் அரசு சுற்றுலா மாளி கையில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

மேலும் வள்ளியூர் பகுதியில் ஏராளமான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பத்திரிகை களில் சுட்டிக் காட்டப்பட்டது.

இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும், ஏற்கனவே மனித உரிமை ஆணையத்தில்
விசாரணை நடந்து வரும் பல்வேறு வழக்குகளில் ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யாததால் இது தொடர்பாகவும் விளக்கம் அளிக்க அவர்களுக்கு சம்மன் அளிக்கப்பட்டது.

மேலும் இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா, காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார், காவல் ஆணையாளருக்கு பதிலாக துணை ஆணையர் சுகுணாசிங் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அப்போது அவர்கள் பழைய வழக்குகளின் அறிக்கையை விரைவில் தாக்கல் செய்வதாக கூறினர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :