காவல்துறை துணை ஆணையரே என்னோடு மோதுவதற்கு தயாரா..? – கருணாஸ் சவால்..!

0
694
police deputy commissioner ready fight karunas challenge india tamil news

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கடந்த 16ம் தேதி வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார்.police deputy commissioner ready fight karunas challenge india tamil news

அப்போது சென்னை தி.நகர் காவல்துறை துணை ஆணையர் அரவிந்தன் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வதாகவும், காக்கிச் சட்டையை சுழற்றி விட்டு வந்தால் மோதிப் பார்த்து விடலாம் என்றும் கருணாஸ் ஆவேசமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், கருணாஸின் இந்த பேச்சுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு அவர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தமது சாதி பெயரை குறிப்பிட்டு பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.

மேலும், தங்களை உயர்த்தி கொள்வதற்காக பிற சமுதாயத்தினரை கொச்சைப்படுத்தி பேசுவது தவறான பாதைக்கு வழி காட்டுவதாகும் எனவும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது போன்ற கலவரங்களை தூண்டுகின்ற பேச்சுகளை அனுமதிக்கப்பட கூடாது என கூறியுள்ள ஈஸ்வரன், கருணாஸ் மீது தமிழக அரசு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :