பிரித்தானியாவில் மசூதி அருகே முஸ்லிம்கள் மீது தாக்குதல்

0
451
Attacking Muslims near mosque Britain

பிரித்தானிய தலைநகர் லண்டனிலுள்ள மசூதிக்கு வெளியே மக்கள் கூடியிருந்த சந்தர்ப்பத்தில் வேண்டுமென்றே காரை மோதச் செய்து தாக்குதலுக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. Attacking Muslims near mosque Britain

எட்குவயார் வீதியிலுள்ள அல் மஜ்லிஸ் அல் ஹீஸ்ஸானி மசூதிக்கு வெளியே இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கார் வேண்டுமென்றே வேகமாக வந்து மசூதிக்கு முன் கூட்டமாக பக்தர்கள் குவிந்திருக்கும் வேளையில், மோதிவிட்டு தாங்கள் முஸ்லிம் எதிர்ப்பாளர்கள் என கூச்சலிட்டுக் கொண்டு சென்றதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த சம்பவத்தை பயங்கரவாதச் செயலாகக் கருத முடியாதென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குற்றங்கள் நிறைந்த சமூகத்தில் தங்களது சமூகம் சகித்துக் கொண்டு வாழ்வதாக குறித்த மசூதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். விபத்து குறித்த விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

tags :- Attacking Muslims near mosque Britain

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************