சிறுமி ஒருவரை துணிச்சலாக காப்பாற்றியதால் பரிஸின் ஹீரோ என வர்ணிக்கப்படும் மமது கசாமாவை யாரும் மறந்திருக்க முடியாது. பிரிஞ்சி குடியுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி கூறியதன் படி, தற்போது பிரெஞ்சு குடிமகன் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். Paris hero got citizenship France news
கடந்த மே மாதம் 27 ஆம் திகதி, கட்டிடத்தில் தொங்கிக்கொண்டிருந்த சிறுமி ஒருவரை துணிச்சலாக காப்பாற்றியிருந்தார் Mamoudou Gassama. காப்பாற்றிய போது எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, மறுநாள் பரிஸின் ஹீரோ என அடையாளப்படுத்தப்பட்டு பிரபலமாகியிருந்தார்.
இதனால் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அழைத்து, மமது கசாமாவுக்கு தீயணைப்புத்துறையில் வேலையும், குடியுரிமையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து, சமீபத்தில் அவர் பரிஸில் தீயணைப்பு துறையில் பணிக்கு சேர்ந்தார். அதைத் தொடர்ந்து, தற்போது இவர் நாட்டின் குடியுரிமையை பெற்றுக்கொள்வதாகவும், அதற்குரிய சகல ஆவணங்களையும் தயார் செய்து பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.