ஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்களுக்கான முக்கிய அறிவித்தல்

0
363
Important notice British Europe

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு 6 மாதங்களே உள்ள நிலையில், ஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. Important notice British Europe

உடன்பாடற்ற பிரெக்சிற் ஏற்படுத்தப்படும் பட்சத்தில், ஐரோப்பிய ஒன்றிய வீதிகளில் பயணிக்க பிரித்தானிய சாரதிகள் சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரத்தை பெறவேண்டிய நிலை ஏற்படும்.

உடன்பாடற்ற பிரெக்சிற்கு தற்போது பிரித்தானியா தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு இடம்பெற்றால் ஐரோப்பிய ஒன்றித்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் எதிர்வரும் 2019 மார்ச் மாதத்திற்கு பின்னர், ஒன்றியத்தின் வீதிகளை பயன்படுத்த முடியாது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயணிக்கும் பிரித்தானியர்கள், தமது சாரதி அனுமதிப்பத்திரம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகின்றது.

மேலும் அடுத்த ஆண்டுக்குள் காலாவதியாகும் கடவுச் சீட்டுக்கள் வைத்திருக்கும் பிரித்தானியர்கள் உடனடியாக புதிய ஆவணங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது பிரித்தானியாவில் உள்ள சில அஞ்சலகங்களில் 5.50 யூரோ கட்டணத்தில் சர்வதேச ஓட்டுநர் அனுமதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றது.

உடன்பாடற்ற பிரெக்சிற் எட்டப்படும் போது ஒன்றியத்தின் சலுகைகளை பிரித்தானியா இழக்கும் என்பதனால், உடன்பாடுகளுடனான பிரெக்சிற்றிற்கு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

tags :- Important notice British Europe

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************